Home நாடு சுஹாகாமின் கருத்தினால் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம்!

சுஹாகாமின் கருத்தினால் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம்!

1088
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரத்தில் சுஹாகாமின் கருத்து, மலேசியக் காவல் துறையின் நற்பெயரைக் பாதித்துள்ளது என இடைக்கால காவல் துறைத் துணைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.

வெளிப்படையாக பொது மக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற இந்த கருத்தினால், காவல் துறையினரை மோசமாக சித்தரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து விசாரிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் சுஹாகாமின் சந்தேகங்களை அக்குழு தெளிவுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் நடந்த போதுதற்போதைய காவல் துறைத் தலைவரான டான்ஶ்ரீ முகமட் புசி ஹாருன் காவல் துறை சிறப்பு பிரிவுக்கான தலைவராக இருந்ததது குறிப்பிடத்தக்கது. பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு காவல் துறை சிறப்பு பிரிவுதான் காரணம் என சுஹாகாம் கருத்துத் தெரிவித்திருந்தது

2017 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் இவ்விரண்டு நபர்களும் காணாமல் போன நேரத்தில் காவல் துறை சிறப்பு பிரிவு மேலாளராக முகமட் புசி இருந்துள்ளார்வருகிற மே 4-ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.