சென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளனர்.
அண்மையில் இத்திரைப்படத்தின் புகைப்பட பதிவின் போது அவர் காவல் அதிகாரியாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முதல் தோற்றம் இன்று செவ்வாய்க்கிழமை, உள்நாட்டு நேரம்படி காலை 8.30 மணி அளவில் லைகா நிறுவனம் வெளியிட்டது.
இத்திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக, சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.