Home நாடு அறிவியல், கணிதம் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும்!- பிரதமர்

அறிவியல், கணிதம் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும்!- பிரதமர்

880
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள் ஒரு சில பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டு வந்தாலும், இந்த நடைமுறை எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

கூடிய விரைவில் இவ்விரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிக்கும் இரட்டை மொழி பாடத்திட்டதினை அமல்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு பாடங்களும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய பாடங்களாக இருப்பதால், அவற்றை ஆங்கிலத்தில் போதித்தால், அவர்களின் எதிர்காலம் நன்முறையில் இருக்கும் எனவும், வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மலாய்க்காரர்களின் ஆங்கிலப் புலமையைக் கிண்டல் செய்யப்படுவது இனிமேலும் நடக்காமலிருப்பதற்கு இந்த செயல்முறை அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக் காட்டி உள்ளார். இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.