Home உலகம் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் தொடங்கியது!

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் தொடங்கியது!

1320
0
SHARE
Ad

ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டின் தேர்தல், இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரைத் தேர்தெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

நாடெங்கிலும் 10,720 வாக்களிப்பு மையங்களில், காலை 7 மணி அளவில் வாக்களிப்புத் தொடங்கியதாக சின் ஜுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி அளவில் வாக்களிப்பு முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் நடப்பு பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹு பிரதிநிதிக்கும் கட்சியான லிக்குட் கட்சியும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவர் தலைவர், பென்னி கான்ந்த்ஸ்சின் கட்சியும் போட்டியில் இறக்கியுள்ளன.   

#TamilSchoolmychoice

மத்திய தேர்தல் குழுவின் அறிக்கைபடி, சுமார் 6.34 மில்லியன் இஸ்ரேலியர்கள் இன்று வாக்களிக்க உள்ளதாக நம்பப்படுகிறது.

120 நாடாளுமன்ற இடங்களைப் பூர்த்தி செய்வதற்கு 40 –க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.