Home நாடு ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்!- டாக்டர் சுப்பிரமணியம்

ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்!- டாக்டர் சுப்பிரமணியம்

861
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மேல்

ரந்தாவ்: வருகிற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், அடுத்து வருகிற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதி என  முன்னாள் மஇகா கட்சித் தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை 50 பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் கூறினார்.

மேலும், முகமட் ஹசான் அம்னோவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அரசியலில் எப்பொழுதும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இன்றைய அரசாங்கம் நாளை இருக்காது. ஆகவே, தேசிய முன்னணி அடுத்த ஆட்சி அரசாங்கமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், எதிர்காலத்தைச் சிந்தித்தும், ரந்தாவ் வாழ் மக்கள் நல்லதொரு தீர்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.