Home நாடு மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

2141
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, தெங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில், ஜோகூர் சுல்தானுக்குதான், மாநில மந்திரி பெசாரை நியமிப்பதில் முழு உரிமையும் உள்ளது எனக் குறிப்பிட்டதற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இது ஓர் அரசியல் விவகாரம், சுல்தானுக்கு இதில் பங்கு இல்லைஎன்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். தேர்தலில் வெற்றிப் பெற்ற கட்சிக்கு மந்திரி பெசாரை நியமிக்க எல்லா விதமான உரிமையும் உண்டு என அவர் குறிப்பிட்டார்.