Home இந்தியா இந்தியா தேர்தல்: 91 தொகுதிகளில் 65% வாக்குப்பதிவு!

இந்தியா தேர்தல்: 91 தொகுதிகளில் 65% வாக்குப்பதிவு!

779
0
SHARE
Ad

புது டில்லி: 2019-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மேலும், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் தொடங்கப்பட்டன.

இதில், சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தொடங்கி மே மாதம் 19–ஆம் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 80.9 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக பீகாரில் 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அது குறிப்பிட்டுருந்தது.

கடந்த முறை 65.8 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை குறைவாகவே பதிவாகியுள்ளன.