Home கலை உலகம் நடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்

நடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்

1530
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக ஈடுபாடு காட்டி வந்திருக்கும் நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்திஷ் இன்று மாரடைப்பால் காலமானார்.

ஜேகே. ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்கு ஆதரவாகத் தற்போது செயல்பட்டு வந்த ரித்திஷ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

இராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.