ஜகார்த்தா: வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 17) நடைபெறுகிறது. அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் தங்களின் நாட்டை ஆளப்போவது யாரென்பதை 192 மில்லியன் வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
மொத்தமாக சுமார் 245,000 வேட்பாளர்கள் நாடெங்கிலும் களம் இறங்கி உள்ளனர். சுமார் 800,000 வாக்குப்பதிவு நிலையங்கள் வாக்குகளைப் பதிவுச் செய்வதற்காக ஆறு மணி நேரங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும்.
ஜனாதிபதி தேர்தலில், நடப்பு ஜனாதிபதியான,ஜோகோ விடோடோ, களம் இறங்க இருக்கும் வேளையில், அவருக்கு எதிராக முன்னாள் இராணூவத் தளபதி பிரபோவோ சுபியாண்டோ களம் இறங்குகிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏழைகளின் நாயகனாகத் திகழ்ந்தஜோகோ விடோடோ ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டார். இம்முறை, யார் ஜனாதிபதியாக வாகை சூடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.