Home கலை உலகம் ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி

865
0
SHARE
Ad

jolieலாஸ் ஏஞ்சல்ஸ், ஏப். 3- ஹாலிவுட்டின் ‘கனவுக் கன்னி’ என்று அழைக்கப்படுபவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37).

நடிப்பு தவிர, ஆடை மற்றும் நகைகள் வடிவமைப்பதையும் இவர் தொழிலாக செய்து வருகிறார். ‘ஸ்டைல் ஆஃப் ஜோலி’ என்ற பெயரில் உலகின் பிரபல கடைகளில் இவரது தயாரிப்புகள் பெரிய அளவில் விற்பனையாகின்றன.

இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து, ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஏஞ்சலினா ஜோலி உருவாக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராகவும் உள்ள இவர், கடந்த ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு சென்றார். அங்கு உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண்களிடையே கண்ணீர் மல்க அவர் ஆற்றிய உரை அனைவரின் மனதையும் கவர்ந்தது.

இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பள்ளிக்கூடங்களை தொடங்க ஏஞ்சலினா ஜோலி முடிவெடுத்தார். இந்த முடிவின் முதல்கட்டமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அருகே பெண்கள் பள்ளி ஒன்றை அவர் திறந்துள்ளார். இந்த பள்ளியில் சுமார் 200 முதல் 300 பிள்ளைகள் படிக்க முடியும்.

உலகின் பிற நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் தற்போது ஏஞ்சலினா ஜோலி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.