Home உலகம் இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது!

இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது!

1029
0
SHARE
Ad

ஜகார்த்தா: உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் இன்று புதன்கிழமை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல்நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகிறது என சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் தங்களின் நாட்டை ஆளப்போவது யாரென்பதை 192 மில்லியன் வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

மொத்தமாக சுமார் 245,000 வேட்பாளர்கள் நாடெங்கிலும் களம் இறங்கி உள்ளனர். சுமார் 800,000 வாக்குப்பதிவு நிலையங்கள் வாக்குகளைப் பதிவுச் செய்வதற்காக ஆறு மணி நேரங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என இந்தோனிசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜனாதிபதி தேர்தலில்நடப்பு ஜனாதிபதியான,ஜோகோ விடோடோ, களம் இறங்க இருக்கும் வேளையில், அவருக்கு எதிராக முன்னாள் இராணூவத் தளபதி பிரோபோவோ சுபியாண்டோ களம் இறங்குகிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏழைகளின் நாயகனாகத் திகழ்ந்தஜோகோ விடோடோ ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டார். இம்முறை, யார் ஜனாதிபதியாக வாகை சூடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகமான பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வணிக நட்பு சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விடோடோ வலியுறுத்துகிறார், அதே நேரத்தில் பிரோபோவோ பாதுகாப்பை அதிகப்படுத்தி மக்கள் நலன்களை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளார்.