வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பாடலான ‘டக்குனு டக்குனு’ எனும் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹிப்ஹோப் தமிழா இசையில், இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளில் இரசிகர்கள் இப்பாடலை பரவலாகப் பதிவு செய்து வருகின்றனர். நகைச்சுவைப் படங்களை இயக்கி வருவதில் தனி ஓர் இடத்தினைப் பெற்ற ராஜேஷ், இப்படத்திலும் தனது நகைச்சுவைக் கலந்த திரைக்கதை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பாடலைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: