Home நாடு திகில் திரைப்படங்களை தன் வசமாக்கும் அருள்நிதி!

திகில் திரைப்படங்களை தன் வசமாக்கும் அருள்நிதி!

776
0
SHARE
Ad

சென்னை: ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை தொடர்ந்த பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படம் கே13. இந்த படம் விரைவில் திரைக்கு வரைவிருக்கிறது. இந்நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியின் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் திகில் திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அருள்நிதி நடித்து வெளியான பெரும்பாலான பபடங்கள் அதே பாணியில் இயக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தும் மக்கள் மத்தில் அமோக வரவேற்பை பெற்றன.

#TamilSchoolmychoice

மேலும் இந்த படத்தின் கதாநாயகி, துணை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், தற்போது, அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இப்படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜாஇசையமைக்கிறார்.