சென்னை: நேற்று வியாழக்கிழமை, இந்தியா முழுவதிலும் உள்ள பதினொரு மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும், தமிழகத்தில் மட்டும் 71 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 17-வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நேற்று இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 66,702 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
அதிகபட்சமாக நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 79.75 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 விழுக்காடுவாக்குகளும்பதிவாகிஇருப்பதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.