Home நாடு “பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை முறையினை மேம்படுத்த வழிகள் கண்டறியப்படும்!”- வேதமூர்த்தி

“பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை முறையினை மேம்படுத்த வழிகள் கண்டறியப்படும்!”- வேதமூர்த்தி

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த வாரம் திங்கட்கிழமை தேசிய பூர்வக்குடி மக்களின் மாநாடு புத்ராஜெயாவில் நடைபெற உள்ளது.  இது குறித்து கருத்துரைத்த, பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி, பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை முறையினை மாற்றியமைப்பதற்கு இம்மாநாடு பெருமளவில் உதவ உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பூர்வக்குடியினரின் சவால்களை சமாளிக்க நாம் முழுமையாக களத்தில் இறங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் முதன்மை சமூகமும், சிறுபான்மையினருமான பூர்வக்குடியினரின் நலனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக, நாம் இதனை செய்தாக வேண்டும்” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பூர்வக்குடி மக்களின் பாரம்பரியத்தை சேதப்படுத்தும் வகையில் ஒரு சில நடைமுறைகள் இருப்பது, அவர்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால், அவர்களுடைய பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு சார்ந்த விசயங்கள் காணாமல் போகிறது” என அவர் கூறினார்.

நிலப்பகுதி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் எதிர்கால திட்ட அபிவிருத்திக்காக அவர்களின் அனுமதியைப் பெறுவதற்கும் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.