Home நாடு ரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்!

ரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்!

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரோலுக்கான அரசாங்கத்தின் உதவித் தொகையை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) மட்டும் அளிக்கும் வகையில், அரசாங்கம் தற்போது நிர்ணயம் செய்து வழங்கி வரும் விலையானது அகற்றப்படலாம் என உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

ஆயினும், இது குறித்து அமைச்சரவை இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரியில், அனைத்துலக எண்ணெய் விலையில் ஏற்றம் இருந்தாலும் கூட, ரோன் 95 பெட்ரோல் விலையை 2.08 ரிங்கிட்டுக்கு அனைத்து பயனர்களுக்கும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

தற்போதைய விலையை தொடர்ந்து நீட்டிப்பதா, அல்லது வார அடிப்படையிலான மிதவை விலை நிர்ணய முறைமையை செயல்படுத்துவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிஎஸ்எச் பெறுனர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இதற்கான பனத்தை அரசாங்கம் நேரடியாக அவர்களது வங்கியில் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.