கடந்த ஞாயிறன்று, ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கும் போது, கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரையிலும் 359 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள வேளையில், இதில் ஒன்பது பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்புவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்தின் பின்புறம் பலத்த வெடி சத்தம் கேட்டதாக அங்கிருந்த பொதுமக்களும் காவல் துறையினரும் தெரிவித்துள்ளனர்.