Home Video விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்!

1524
0
SHARE
Ad

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் கொலைகாரன்.

இத்திரைப்படத்தில் அவர் பல்வேறு கொலைகளை செய்து, புத்திசாலித்தனமாக தப்பிக்கும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரை எளிதாக திசை திருப்பும் திறமையைக் கொண்டிருப்பதோடு, உளச்சிக்கல் உள்ளவராகவும் இத்திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், சீதா, சத்யன், மயில்சாமி, ஜான் விஜய் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மே மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கீழே காணப்படும் இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: