Home நாடு இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

887
0
SHARE
Ad

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் கூறுகையில், இஸ்லாம் அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதாகவும், அது அமைதியை விரும்பும் மதம் என்றும் கூறினார்.

இலங்கையில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள டாயிஸ் தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இவர்களின் வன்முறை செயல்கள் குர்ஆனில் உள்ள போதனைகளுக்கு எதிரானவைஎன்று அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 359 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் போது உலக மக்கள் ஒன்றுகூடி எப்படி அவர்களின் அன்பை வெளிப்படுத்தினார்களோ, அவ்வாறு மலேசியர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் அன்பு மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.