சென்னை: கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால், திருச்சியைச் கோமதி மாரிமுத்து கடினமாக உழைத்து தனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
இதனிடையே, தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 15 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது. கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் 10 இலட்சம் ரூபாயும், காங்கிரஸ் சார்பில் 5 இலட்ச ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரோபோ ஷங்கர், விஜய் சேதுபதி ஆகிதோரும் கோமதிக்கு ஊக்கத்தொகை கொடுத்து உதவியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கோமதி மாரிமுத்து உள்பட ஆசிய போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடியவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில் கொள்ளாது மக்கள் தங்களின் ஆதங்கங்களை வெளிக்காட்டியுள்ளனர் என அரசு கூறியுள்ளது.