Home கலை உலகம் ‘தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு!

‘தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு!

1117
0
SHARE
Ad

மும்பை: ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் கற்களை வீசியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தர்பார் திரைப்படத்தின் காட்சிகள் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி ஒன்றில் இந்தப் படக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த மாணவர்கள் புகைப்படம் மற்றும் அதனை காணொளியாக பதிவு செய்ய முற்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் மாணவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள், படப்பிடிப்பு தளத்தில் கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.