Home இந்தியா அந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு!

அந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு!

1009
0
SHARE
Ad

சென்னை: அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் வர வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கு 1996-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் வரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அவ்வகையில்,  வருகிற 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா நேரில் வர வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.