Home நாடு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்!- பிரதமர்

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்!- பிரதமர்

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் பசியை மட்டுமே கட்டுப்படுத்துவது முக்கிய நோக்கம் கிடையாது, மாறாக அளவற்ற ஆசைகள் மற்றும் ஒழுக்கத்தைக் மேம்படுத்தவும் இம்மாதத்தில் கூறப்பட்டிருக்கிறது என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

உதாரணமாக, ஊழல் விவகாரங்களில் ஈடுபடுவது தவறு என்று தெரியும், இருந்து நாம் அவற்றை பெற்றுக் கொள்கிறோம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரியவில்லை” என பிரதமர் கூறினார்.

இவ்வாறு இருக்கையில் நாம் பலவீனமாக மற்றும் எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது நபர்களாக ஆகி விடுகிறோம். பலவீனமானவர்கள் வாழ்வில் வெற்றிக் காண முடியாது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கத்தினை இஸ்லாமிய மதத்தினர் புரிந்து கொள்வர் என தாம் நம்புவதாகவும், வெறுமனே புண்ணியங்களை சேர்த்து கொள்வது மட்டுமல்ல, மாறாக நல்ல மனிதனாகவும் மற்றும் நம்பகமான நபராகவும் அது அவர்களை உருவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, நிச்சயமாக அவர்களும் ஒரு குறிப்பிட்ட வெவ்வேறான விரத நடைமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள்.  இவை அனைத்திற்கும் முக்கியமாக அமைவது சுய கட்டுப்பாடே என பிரதமர் கருத்துரைத்தார்.