Home நாடு சண்டாக்கான்: மே 7-இல் முன்கூட்டியே வாக்களிப்பு, தேர்தல் ஆணையம் தயார்!

சண்டாக்கான்: மே 7-இல் முன்கூட்டியே வாக்களிப்பு, தேர்தல் ஆணையம் தயார்!

718
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முன் கூட்டியே வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இம்முறை இத்தேர்தலில் சுமார் 270 காவல் துறையினர் வாக்களிக்க உள்ளனர்.

இரண்டு வாக்களிப்பு மையங்கள் இதற்காக திறக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

சண்டாக்கான் கடல் காவல் படை மூத்த அதிகாரிகளின் உணவிடத்தில் காலை 8 மணி தொடங்கி மதியம் 2 மணியளவிலும் வாக்களிக்க இயலும் எனவும், சண்டாக்கான் மாவட்ட காவல் தலைமையக மன்றத்தில் காலை 8 மணி தொடங்கி மதியம் 12 மணியளவிலும் காவல் அதிகாரிகள் தங்களின் வாக்குகளை செலுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.   

#TamilSchoolmychoice

இந்த முன்கூட்டியே வாக்களிப்பை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் வேட்பாளர் முகவர்கள் பார்வையிடுவார்கள் என்று ஓர் அறிக்கையின் மூலம் அசார் தெரிவித்தார்.