Home உலகம் மாஸ்கோ: விமானம் தீப்பற்றிக் கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்!

மாஸ்கோ: விமானம் தீப்பற்றிக் கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்!

836
0
SHARE
Ad

மாஸ்கோ: மாஸ்கோவில் உள்ள சிரெமெத்தியூ அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எஸ்எஸ்ஜே-100 ரக பயணிகள் விமானம் தீப்பற்றிக் கொண்டதில், அவ்விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உயிரிழந்ததாக சின் ஜுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவசர தரையிறக்கத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக ரஷ்ய புலனாய்வுக் குழு உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் சுமார் 78 பேர் பயணம் செய்துள்ளனர். உள்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்கு சிரெமெத்தியூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம், 40 நிமிடங்களில் அவசரமாக தரையிறங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

மின்னல் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்துக்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியக் குற்றங்களுக்காக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.