Home இந்தியா பணம் கொடுத்து வாக்கைப் பெற விருப்பமில்லை!- கமல்ஹாசன்

பணம் கொடுத்து வாக்கைப் பெற விருப்பமில்லை!- கமல்ஹாசன்

629
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்துப் பேசிய தலைவர் கமலஹாசன் ஒரு ரூபாய் கூட வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் கூட வரி பணத்தை எடுக்க மாட்டேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் தேர்தலை முன்னிட்டு தமிழ் நாட்டில் அதிகபடியாக பணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   

விளாச்சேரியில் பேசிய கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் பகுதியில் குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும், சுத்தம் செய்யப்படாமல் உள்ள சாக்கடைகள் சுத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்