Home நாடு ஜோ லோவை தேடும் பணி ஓயாது, அதிகாரிகள் நெருங்கி விட்டனர்!- பிரதமர்

ஜோ லோவை தேடும் பணி ஓயாது, அதிகாரிகள் நெருங்கி விட்டனர்!- பிரதமர்

652
0
SHARE
Ad

புத்ராஜெயா: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாதி நிதி மீண்டும் கிடைக்கப்பெற்றாலும், தொழிலதிபர் ஜோ லோவை தேடும் பணி தொடரப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.  

“ஏராளமான பணம் காணாமல் போய் விட்டது. மேலும், 1எம்டிபி நிதியிலிருந்து ஜோ லோ அவற்றை எடுத்தது குறித்து நம்மிடம் ஆதாரங்களும் உண்டு” என பிரதமர் கூறினார். காணாமல் போன நிதியிலிருந்து தற்போது கிடைக்க இருக்கும் நிதியின் அளவு 2 பில்லியனுக்கும் குறைவானது என பிரதமர் குறிப்பிட்டார்.

ஜோ லோவை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டாலும் அவரை அதிகாரிகள் நெருங்கி விட்டனர் என்று பிதரமர் கூறினார்.