சீனாவில் சிறுபான்மையினராகக் கருதப்படும் முஸ்லிம் சமூகத்தினரை அவர்களின் மத வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கவும், நோன்பினை கடைப்பிடிக்கவும் அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இதனை நம் நாட்டு இஸ்லாமிய மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்நாட்டின் காபிர் ஆட்சி செய்தால் நம் நிலைமையும் இப்படிதான் ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இளைய தலைமுறையினர் சரியான அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
“வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில் ஜசெக ஆட்சியில் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.