Home நாடு 1எம்டிபியின் 1.3 பில்லியன் ரிங்கிட் பணம் மீட்பு

1எம்டிபியின் 1.3 பில்லியன் ரிங்கிட் பணம் மீட்பு

695
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கடந்த ஆண்டு மே மாதத்தில் 1 எம்டிபி மீதான ஊழல் விசாரணை தொடங்கியதிலிருந்து, இதுவரையில் 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை மலேசியா மீட்டது.

இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 236.5 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் மீட்க்கப்பட்டுள்ளன. திரும்பக் கைப்பற்றப்பட்ட சொத்துகள் அனைத்தும் 1எம்டிபி சொத்து மீட்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்த நோக்கத்திற்காக தனிப்படுத்தப்பட்ட நம்பகமான கணக்கு தொடங்கப்பட்டது.

இந்த விவரங்களை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் நஜிப்பின் மகன் ரிசா அசிஸ் பங்குதாரராக இருந்த ஆங்கிலத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் கிரானைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படத்தின் இலாபமும் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட தொகையில் அடங்கும்.

கடந்த மாதம் மலேசிய கடற்துறை நீதிமன்றத்தால் ஏல முறையில் விற்கப்பட்ட இக்குனாமிட்டி சொகுசுப் படகின் விற்பனையின் மூலம் 522.6 மில்லியன் ரிங்கிட் அரசாங்கத்திற்குக் கிடைத்தது.

நியூயார்க், மன்ஹாட்டனில் உள்ள பார்க் லேன் ஹோட்டலில் 1எம்டிபியில் ஊழல் புரிந்து தலைமறைவாகியிருக்கும் ஜோ லோவின் பங்குகளை விற்பனை செய்ததன் விளைவாக கிடைக்கப் பெறும் 576.5 மில்லியன் ரிங்கிட்டை அமெரிக்க நீதித் துறை திருப்பியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் டோமி தோமஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.