Home நாடு சீரமைப்புப் பணிகள் முடிந்து 15 மணி நேரம் ஆகியும் தண்ணீர் வரவில்லை!- பொதுமக்கள்

சீரமைப்புப் பணிகள் முடிந்து 15 மணி நேரம் ஆகியும் தண்ணீர் வரவில்லை!- பொதுமக்கள்

790
0
SHARE
Ad

கிள்ளான்: கிள்ளான் பகுதிகளில் கடந்த 5-ஆம் தேதி நீர் விநியோகத் தடை ஏற்பட்டு, கால வரையின்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டதில் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நேற்றிரவு செவ்வாய்கிழமை 8.20 மணியளவில் எல்லா சீரமைப்புப் பணிகளும் முடிந்து விட்ட நிலையில், நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் எனக் கூறிய 13 மணி நேரத்திற்கு பிறகும் பெரும்பாலான பகுதிகளில் நீர் தடை இன்னும் வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

புக்கிட் ராஜாவில் தண்ணீர் குழாய் உடைந்ததால் இப்பகுதியில் நீர் தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தினால் மேரு சாலை, தாமான் முத்தியாரா வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

#TamilSchoolmychoice

மேற்குக் கரையோர நெடுஞ்சாலை (பந்திங்- தைப்பிங்) நிர் மாணிப்புத் திட்டத்தின் பாலம் இடிந்து விழுந்ததில் தண்ணீர் குழாய் உடைந்ததாக ஸ்பான் தெரிவித்துள்ளது.