Home நாடு பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

760
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமையன்று நடைபெற இருக்கு சண்டாக்கான் இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் இடையிலான யுத்தம் என அன்வார் இப்ராகிம் தனது பிரச்சார உரையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

மலாய்க்காரர், சீனர், இந்தியர், ஈபான், கடசான்ஆகியோரின் நலன்களைக் காக்கும் அரசாங்கம் வேண்டுமா, அல்லது வெறும் மலாய்க்காரர்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் அரசாங்கம் வேண்டுமா என்பதனை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என அன்வார் கூறினார்.

தற்போதைய அரசாங்கமானது மக்களின் தேவைகளை இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தவில்லை என அனவார் மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து, அதன் துணைத் தலைவர் லிண்டாசேன் போட்டியிடும் வேளையில், ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து விவியன் வோங் போட்டியிடுகிறார்.

சபா மாநில அம்னோ, பாஸ், யுஸ்னோ மற்றும் ஸ்டார் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய சபா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.