முகமட் ஹசான் இன்று புதன்கிழமை இரவு 9 மணிக்கு பண்டார் லெதாட் ஜெயாவில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கும் வேளையில், வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நஜிப் ஜாயண்ட் விற்பனை மையத்தில் பொது மக்களைச் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.
51 விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்டிருக்கும் சண்டாக்கான் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவது கடினமானது என்ற போதிலும், அப்பகுதியில் வாழும் மலாய் மற்றும் இஸ்லாமிய சபா பூமிபுத்ராக்களின் ஆதரவு ஐக்கிய சபா கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என நம்பப்படுகிரது.