Home கலை உலகம் ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் ‘நடிகையர் திலகம்’!

ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் ‘நடிகையர் திலகம்’!

1046
0
SHARE
Ad

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியானநடிகையர் திலகம்திரைப்படம், வருகிற ஜூன் 15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கும்ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமானநடிகையர் திலகம்படத்தின் தெலுங்கு பதிப்பானமகாநடிஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானநடிகையர் திலகம்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்

#TamilSchoolmychoice

தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தெலுங்கில் இப்படம் மாபெரும் வசூல் சாதனையை பெற்றது. மறைந்த நடிகை சாவித்ரிக்குநடிகையர் திலகம்படம் சிறந்த அஞ்சலியாக இருந்தது. பல்வேறு விருதுகள், பாராட்டுகளை வாங்கி குவித்த இப்படம் உலகளவில் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சீனாவின் ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.