Home One Line P2 கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்

1222
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தியப் படங்களுக்கான இந்திய அரசாங்கத்தின் தேசிய விருதுகள் பட்டியலில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததற்கான கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சாவித்திரியின் உருவ ஒற்றுமையையும், உடல் மொழியையும் அப்படியே திரையில் கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ் பல தரப்புகளிடமிருந்தும் படம் வெளிவந்தபோதே பாராட்டுகளைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது “பாரம்” என்ற படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் படம் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சிறந்த நடிகருக்கான விருது இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ‘அந்தாதுன்’ என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக இந்த விருதைப் பெறுகிறார்.