Home உலகம் இலங்கை முழுவதும் ஊரடங்கு – கிறிஸ்துவ, முஸ்லீம் கலவரங்கள்!

இலங்கை முழுவதும் ஊரடங்கு – கிறிஸ்துவ, முஸ்லீம் கலவரங்கள்!

1361
0
SHARE
Ad

கொழும்பு – அண்மையில் ஈஸ்டர் திருநாளின்போது இலங்கையில் பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்கள், உயர் ரக நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்கம் கடும் எதிர் நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை இலங்கை முழுவதும் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முகநூல் பதிவொன்றில் இடம் பெற்ற தகவலைத் தொடர்ந்து முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை இலங்கை தடை செய்துள்ளது.

#TamilSchoolmychoice