Home நாடு அமைச்சர் வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை!- ஹிண்ட்ராப்

அமைச்சர் வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை!- ஹிண்ட்ராப்

852
0
SHARE
Ad

புத்ராஜெயா: தற்போதைய நோன்பு மாதத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாத செயல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த நான்கு தீவிரவாதிகளை நேற்று திங்கட்கிழமை மலேசிய காவல் துறை கைது செய்திருந்ததாக காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் குறிப்பிட்டிருந்தார்.

காவல் துறையின் இந்த அதிரடி செயலுக்கு ஹிண்ட்ராப் அமைப்பு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

அந்நால்வரை விசாரித்த போது, முக்கிய பிரமுகர்களை கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டு, அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தியின் மீது அவரின் அலுவலகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்தற்பொழுது ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

ஏற்கனவேபன்னாட்டு இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஐநா மன்றத் தீர்மான (ஐசெர்ட்விவகாரத்தில் அமைச்சர் தனித்துவிடப்பட்டதைப் போலசீபீல்ட் ஆலய விவகாரத்தின் போதும், தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரண விவகாரத்திலும் பலி கடா ஆக்கப்பட்டதை ஹிண்ட்ராப் சுட்டிக் காட்டியது.

இப்பொழுது தீவிரவாதத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதுதவறான கருத்தை முன்வைப்பதுடன் இன சமய அரசியலை முடுக்கிவிட்டு நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு பாதகத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டு வருவதாக அது குற்றம் சாட்டியது.

இதன் தொடர்பில், தேசிய காவல் துறைத் தலைவர் அமைச்சர் வேதமூர்த்திக்கு உயரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் கார்த்தி ஷான் கேட்டுக் கொண்டார்.