Home கலை உலகம் சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டெர்’ மோதுகின்றன

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டெர்’ மோதுகின்றன

970
0
SHARE
Ad

சென்னை – இந்த வாரம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகி மோதுகின்றன. சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’, எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மான்ஸ்டெர்’ ஆகிய இரண்டு படங்களுமே அவையாகும்.

மேலும் சில சிறிய முதலீட்டிலான படங்கள் வெளியாகலாம் என்றாலும் இந்த இரண்டு படங்களுக்கிடையில்தான் இந்த வார வெளியீடுகளில் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இணையாக நயன்தாரா நடிப்பதால் மிஸ்டர் லோக்கல் படத்துக்கான முதல்கட்ட வசூல் அதிகமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

சூர்யாவின் நடிப்பிற்காக, அவரது சேட்டைகளுக்காக, மான்ஸ்டெர் இரசிகர்களால் இரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி! எப்படி இருக்கிறது மிஸ்டர் லோக்கல் படம்?

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் விமர்சனத்தை நாளை சனிக்கிழமை செல்லியலில் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்!