Home Photo News தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

1880
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய உத்தமம் அமைப்பும் இணைந்து இப்போட்டிகளை வழிநடத்துகின்றன. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

ஜோகூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மே 17-ஆம் நாள் தேசிய வகை ரீனி தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா  சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

அவர் தம் உரையில் மின்னியல் பொருளாதாரம் மாணவர்களின் உந்து சக்தியாக இருக்க வேண்டும் அதுபோல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும், தொடர்ந்து 21-ஆம் நூற்றாண்டு கல்வியின் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் அடுத்த வருடம் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புதிர்ப்போட்டியில் பங்கெடுக்க வழிவகை செய்வதாக கூறினார். தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆற்றலை மாணவர்கள் பெற்று இடைநிலைப்பள்ளியில் ஏற்படும் சவால்களை சமாளிக்க முடியும். ஜோகூர் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியின் அனைத்து செலவினையும்  டாக்டர் இராமகிருஷ்ணனே ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.  மேலும் இப்போட்டியை ஏற்பாடு செய்த தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டு ஜோகூர் மாநிலத்திருந்து இருந்து சுமார் 116 மாணவர்களும் 30 தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி மற்றும் ஸ்கேரேட்ஸ் போட்டிகள் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான . தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஐபிபிபி மண்டபத்தில் (IPPP) நடைபெறும்.

போட்டியில் கலந்து சிறப்பித்த மாணவர்களும் சிறப்பு விருந்தினர்களும்.