Home உலகம் ஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்

ஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்

779
0
SHARE
Ad
பிரபாவோ சுபியாந்தோ – ஜோகோ விடோடோ

ஜாகர்த்தா – அதிகாரபூர்வ முடிவுகளின்படி இந்தோனிசியாவின் நடப்பு அதிபர் ஜோகோவி என்று அழைக்கப்படும் ஜோகோ விடோடோ இரண்டாவது தவணைக்கு இந்தோனிசியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மொத்த வாக்குகளில் 55.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான (ஜெனரல்) பிராபோவோ சுபியாந்தோ தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

260 மில்லியன் மக்களைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாக இந்தோனிசியா திகழ்கிறது.