Home கலை உலகம் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி: மீண்டும் வடிவேலு நாயகனாக நடிப்பது கேள்விக்குறி!

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி: மீண்டும் வடிவேலு நாயகனாக நடிப்பது கேள்விக்குறி!

1220
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2006-ஆம் ஆண்டு வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வடிவேலுவை நகைச்சுவை பாணியில் வேறு விதமாக வெளிக்கொணர்ந்த படம் இது என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தைஇம்சை 24-ம் புலிகேசிஎன்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டதுஇயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இந்த படம் திட்டமிடப்பட்டிருந்தது.

நடிகர் வடிவேலுவே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கப்பட நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனதாகவும், பலகோடிகள் இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஷங்கர் தரப்பு கூறியதுஇந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து இயக்குனர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் மும்முரமாகிவிட்டார். இந்நிலையில், சிம்புதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் பதிவிட்டிருந்தது பரவலாகப் பகிரப்பட்டது. ஆயினும், மீண்டும் இதில் வடிவேலு நாயகனாக இருப்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.