இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில் அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்காக குறிப்பான காரணம் என்ன்வென்று தெரியாமல் பாகிஸ்தான் அரசு திக்கு தெரியாமல் இருக்கிறது. ஆயினும், ஒரு சிலர் இதனை உயிரியல் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
குழப்பமடைந்த மருத்துவர்கள் குழந்தைகளின் இரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கு எச்ஐவி கிருமி இருப்பது தெரியவந்துள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி வரை ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் செய்யப்பட்ட இரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். குழந்தைகளின் பெற்றோருக்கு எச்ஐவி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரணை நடந்து வருவதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.