Home வணிகம்/தொழில் நுட்பம் கோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச உரை “புதிய பரிணாமம் ஐடி 4.0”

கோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச உரை “புதிய பரிணாமம் ஐடி 4.0”

870
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனப்படும் கலைக் கலைக் களஞ்சியத்தில் பெயர் பெற்ற மலேசியத் தமிழர் இளைய ஈஸ்வரன் “புதிய பரிணாமம் ஐடி 4.0” என்ற தலைப்பிலான இலவச விளக்க உரை ஒன்றை கோலாலம்பூரில் வழங்கவிருக்கிறார்.

இந்த உரை இன்று புதன்கிழமை (22-05-2019) ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மைய அரங்கில் இரவு 7.30 முதல் 9.30 மணி வரை நடைபெறும்.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது போல் தகவல் தொழில்நுட்பம் மேம்பாடடைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஐடி 4.0 தொழில்நுட்பம் வெகு விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஐடி 4.0 என்றால் என்ன? அது எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது? அதற்கு நாம் எப்படி தயாராகப் போகிறோம் என்பது போன்ற பல கேள்விகளுக்கு அனைத்துலக நிபுணர்களான டாக்டர் இளைய ஈஸ்வரன், லால்லான் ஆகியோர் தங்களின் உரைகளின் வழி விளக்கமளிப்பர்.

#TamilSchoolmychoice

ஐடி 4.0 தொழில்துறையின் தேவைகள் யாவை? மாணவர்களிடையே உலகப் புகழ்பெற்று வரும் பைத்தன் ப்ரோக்ராம் (Python Program) என்றால் என்ன? எதனால் பைத்தன் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது? போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதோடு இந்த பைத்தனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் புளு மைக்ரோ சொலுசென்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியும் உலகின் தலைசிறந்த 100 இணைய நூல்களின் ஆசிரியர்களில் ஒருவரான இளைய ஈஸ்வரனும் விளக்கமளிப்பர்.
நாடு தற்போது புதிய தொழில்நுட்பத்தை அனுசரித்து பயணித்து கொண்டிருக்கும் வேளையில், இந்த உருமாற்றத்தில் ஏற்படும் வேலை வாய்ப்புகள், மற்றும் வணிக வாய்ப்புகளை இந்தியர்கள் இழந்துவிடாதிருக்க இந்த விளக்கக் கூட்டம் மிகவும் பயனான ஒன்றாக அமையும்.
மேலும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் இவர்கள் பதிலளிப்பர்.

இந்த இலவச விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விபரங்களுக்கு www.arthanyana.org என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 0123025643, 0122717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.