Home இந்தியா பாஜக: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து, எடப்பாடி ,ஓபிஎஸ் பங்கேற்பு!

பாஜக: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து, எடப்பாடி ,ஓபிஎஸ் பங்கேற்பு!

667
0
SHARE
Ad

புது டில்லி: வாக்கு எண்ணிக்கை நாளை வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நேற்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விருந்தின் போது அடுத்ததாக ஆட்சியமைக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளான பஞ்சாபின் அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகன் சுக்பிர் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

தேர்தலுக்கு பின்பு வெளியான 14 கருத்துக் கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 12 கணிப்புகள் தெரிவித்தன. பாஜக 282 முதல் 365 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மத்தியில் ஆட்சியமைக்க 271 உறுப்பினர்களின் ஆதரவை தேவை. தமிழகத்தின் வேலூரை தவிர்த்து மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.