Home இந்தியா இந்தியா: முதலில் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும்!- எதிர்க்கட்சிகள்

இந்தியா: முதலில் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும்!- எதிர்க்கட்சிகள்

639
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடந்த வேண்டும் என்றும், ஐந்து மாநிலங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பி, 22 எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளன.

கடந்த 2014-ஆம் தேர்தலைப் போலவே பாஜக பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின்பு எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக கடந்த திங்கட்கிழமை முதல் சமூகவலைதளங்களில் காணொளிக் காட்சிகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன

#TamilSchoolmychoice

50 விழுக்காடு வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா ஐந்து வாக்குச்சாவடிகளில்  ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆயினும், முதலில் ஐந்து விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று நேற்று அவர்கள் வழஙிய மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.