Home இந்தியா நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிகின்றன!

நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிகின்றன!

746
0
SHARE
Ad

புது டில்லி: மோடியின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து அவருக்கு தேசிய மற்றும் உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிந்து வண்ணமாக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது வாழ்த்துச் செய்தியில் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான மக்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் பாஜக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்தியா முழுக்க உள்ள பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து இவ்வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்

கடந்த ஏப்ரல் 21 அன்று இலங்கை தேவாலையங்களில் தாக்குதல் நடக்கப் போவதை முன்கூட்டியே இந்திய உளவுத் துறை எச்சரித்தது. அண்டை நாடான இலங்கையின் நலனுக்கு இந்தியா மிகப்பெரிய உதவிகள் செய்து வருகிறது என தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மோடியின் வெற்றியை அடுத்து, இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, சீன அதிபர் ஜி ஜிங் பிங் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்