Home இந்தியா ராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக

ராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக

828
0
SHARE
Ad

ஜெய்ப்பூர் – நேற்று வெளியிடப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளில் அதிர்ச்சி தரும் மற்றொரு முடிவு ராஜஸ்தான் மாநிலத்தின் முடிவுகளாகும்.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநிலத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அப்போது பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. காரணம் கடந்த மூன்று தவணைகளாக ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த பாஜகவை சொற்ப தொகுதிகள் பெரும்பான்மையில் வீழ்த்தி சாதனை புரிந்தது காங்கிரஸ்.

ஆனால் இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக பழிதீர்த்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கொண்டிராத இந்தியாவின் 21 மாநிலங்களில் ஒரு மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது.