Home இந்தியா “அடுத்த 5 ஆண்டுகள் தமிழர்கள் உரிமையைக் காப்போம்!”- ஸ்டாலின்

“அடுத்த 5 ஆண்டுகள் தமிழர்கள் உரிமையைக் காப்போம்!”- ஸ்டாலின்

702
0
SHARE
Ad

சென்னை: அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. ஒரே ஓர் இடத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி ஆட்சியை பிரதமர் மோடி நடத்துவார் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக மக்களவையில் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள தமிழக மக்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.