Home உலகம் பிரிட்டன்: தெரெசா மே ஜூன் 7-ஆம் தேதி பதவி விலகுகிறார்!

பிரிட்டன்: தெரெசா மே ஜூன் 7-ஆம் தேதி பதவி விலகுகிறார்!

681
0
SHARE
Ad

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே வருகிற ஜூன் 7-ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என ஆர்டி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தே பிரெக்ஸிட் திட்டம் குறித்து பெரும் எதிர்ப்பினை சந்தித்து வந்த மே அண்மையக் காலமாக பின்னடைவைச் சந்தித்து வந்தார்.

தெரெசா மேயின் இத்திட்டத்தின் ஒப்பந்தத்தை மூன்று முறை நாடாளுமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நான் நேசிக்கும் ஒரு நாட்டிற்கு சேவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று மே கண்ணீருடன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பிரெக்ஸிட் திட்டத்தை நிறைவேற்ற இயலாதது குறித்து தாம் ஆழ்ந்த வருத்தம் அடைவதாக அவர் தெரிவித்தார். தமக்கு பிறகு பதவி ஏற்க இருப்பவர்கள் இதனை சரிவர ஆராய்ந்து செயல்படுத்துவர் என தாம் நம்புவதாக மே தெரிவித்தார்.