Home இந்தியா “பாஜக இல்லையெனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்!”- எச்.ராஜா

“பாஜக இல்லையெனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்!”- எச்.ராஜா

860
0
SHARE
Ad

சென்னை: இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆயினும், தமிழகத்தில் பாஜகவின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. ஒரு தொகுதியிலும் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச். ராஜா கருத்துரைக்கையில்,  தமிழகத்திற்கு சாலைகள், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, முன்னேற்ற பாதையில் இந்நாடு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழக மக்கள் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அப்போதுதான் பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இவை அனைத்திலும் விலகி இருக்க முற்பட்டால், தமிழ் நாடு சுடுகாடாக மாறிவிடும் எனக் கருத்துரைத்துள்ளார்.