Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது

அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது

1835
0
SHARE
Ad

வாஷிங்டன் – கடந்த இரண்டு ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மதிப்பு உயர்ந்திருந்த அமெரிக்க டாலர் அனைத்துலக நாணயச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக தனது மதிப்பில் சரிவைக் கண்டது.

அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்களுக்கான அனுப்பாணைகள் (ஆர்டர்கள்) பெருமளவில் குறைந்திருப்பது அமெரிக்க தொழில்களும், பொருளாதாரமும் பரவலாக வீழ்ச்சியடைந்து வருவதைக் குறிப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போரின் விளைவுதான் இது என்றும் அத்தகைய விளைவுகளில் ஒன்றுதான் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது என்றும் அனைத்துலக வணிக வட்டாரங்கள் தெரிவித்தன.